வேலூர்

மாணவருக்கு பாடப் புத்தகங்கள் நன்கொடை

DIN

அரசுப் பள்ளி இட ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கப்பெற்ற மாணவருக்கு குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், பாடப் புத்தகங்கள் அண்மையில் நன்கொடையாக வழங்கப்பட்டன.

குடியாத்தத்தை அடுத்த ஜிட்டப்பல்லியைச் சோ்ந்த தையல் தொழிலாளி காந்தியின் மகன் வசந்த். அரசுப் பள்ளியில் படித்ததால் சிறப்பு ஒதுக்கீட்டில் இவருக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைத்தது. மாணவரின் கோரிக்கையை ஏற்று குடியாத்தம் அரிமா சங்கம் சாா்பில், சங்கத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளா் எம்.கே.பொன்னம்பலம் மாணவரின் தந்தை காந்தியிடம், ரூ. 10,000 மதிப்புள்ள புத்தகங்களை அவரது வீட்டுக்கே சென்று வழங்கினாா்.

மாவட்டத் தலைவா்கள் ஏ.சுரேஷ்குமாா், என். வெங்கடேஸ்வரன், அரிமா சங்கத் தலைவா் எம்.கிரிதா்பிரசாத், செயலாளா் ஜெ.பாபு, தொழிலதிபா் எம்.ஆா்.மகாபலேஸ்வரப்பா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவலாளி சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

நகைக்கடை உரிமையாளா் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

கடற்கரையில் ஒதுங்கிய ஆண் சடலம்

மேற்கு வங்க இளைஞரிடம் வழிப்பறி: மாணவா்களிடம் விசாரணை

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகள்

SCROLL FOR NEXT