ஒரே வாகனத்தில் 5 பேர் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தின் காட்சி 
வேலூர்

ஒரே வாகனத்தில் 5 பேர்: சாகச பயணம் மேற்கொண்ட மாணவர்களைத் தேடும் காவல்துறை

வேலூரில் சாலையில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் மேற்கொண்ட சாகச பயணத்தின் விடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

DIN

வேலூரில் சாலையில் பள்ளி மாணவர்கள் இரு சக்கர வாகனத்தில் மேற்கொண்ட சாகச பயணத்தின் விடியோ காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமீப நாள்களில் சாலையில் இளைஞர்கள் சாகச பயணங்களை மேற்கொள்ளும் விடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது அதைவிட அதிர்ச்சி தரும் சம்பவம் வேலூரில் நடந்துள்ளது விடியோ மூலம் தெரியவந்துள்ளது. 

வேலூரில் சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் பள்ளி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் என 5 பேர் அமர்ந்து செல்லும் காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

வேலூரை அடுத்த அப்துல்லாபுரம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் விடியோ எடுத்து பதிவிட்டுள்ளார். 

இந்நிலையில் விடியோவில் பதிவாகியுள்ள வாகன எண்ணை வைத்து விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆபத்தை உணராமல் மாணவர்கள் இவ்வாறு சாலையில் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT