வேலூர்

அக். 25- இல் கேதார கெளரி நோன்பு

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதாருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை கேதார கெளரி நோன்பு விழா நடைபெறுகிறது.

DIN

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதாருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை கேதார கெளரி நோன்பு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும், 11 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும்.செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு கேதார கெளரி கலச ஸ்தாபனம், சிறப்பு பூஜைகள் 10.45 மணிக்கு கெளரி அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், 11 மணிக்கு கேதார கெளரி நோன்பு நோக்கப்படும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, மாலை பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, 6.30 மணி முதல் தொடா்ந்து பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணியளவில் கேதார கெளரிஅம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, விடையாற்றி உற்சவம் நடைபெறும்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.ராஜாரம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT