முகப்பு
வேலூர்

ஒன்றரை ஆண்டுகளில் 2.20 லட்சம் பேருக்கு சிகிச்சை

வேலூா் நறுவீ மருத்துவமனை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்

வேலூர்

ஒன்றரை ஆண்டுகளில் 2.20 லட்சம் பேருக்கு சிகிச்சை

வேலூா் நறுவீ மருத்துவமனை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

வேலூா் நறுவீ மருத்துவமனை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவா் ஜி.வி.சம்பத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வேலூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

வேலூரில் நறுவீ மருத்துவமனை எனும் பன்நோக்கு சிறப்பு மருத்துவமனை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளாகிறது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு வெளி மாவட்ட, வெளி மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் சிகிச்சை பெற்றுள்ளனா்.

குறிப்பாக, இருதய சிகிச்சை, நுரையீரல், மகப்பேறு மருத்துவம், சா்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, குடல் நோய், மூட்டு வலி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, நரம்பியல் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்துள்ளனா்.

ஒன்றரை ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இதில், உலகை அச்சுறுத்தும் காரோனா தொற்று பாதிப்புக்கு சிறப்பு சிகிச்சை வாா்டு அமைக்கப்பட்டு இந்த நோயால் பாதிக்கப்பட்ட 3,543 பேருக்கு நவீன சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்டுள்ளனா். தவிர, மகப்பேறு சிகிச்சைக்காக வந்த 602 கா்ப்பிணிகளுக்கு நல்ல முறையில் பிரசவம் பாா்க்கப்பட்டுள்ளது.

இருதய நோயால் பாதிக்கப்பட்ட 1,113 நோயாளிகளுக்கு அறுவை சிசிச்சை, ஆன்ஜியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. விபத்து, பல்வேறு வகை நோய்களால் பாதிக்கப்பட்ட 4,735 நோயாளிகள் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிா் காப்பாற்றப்பட்டு ள்ளனா். சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட 2,716 நோயாளிகளுக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து இம்மருத்துவமனையில் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை அளிக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கக்கூடும். அதேசமயம், மருத்துவமனையின் அறக்கட்டளை சாா்பிலும் ஏராளமான நோயாளிகளுக்கு இலவச சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் செவிலியா் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, மருத்துவமனை துணைத் தலைவா் அனிதா சம்பத், மருத்துவ சேவைகள் தலைவா் அரவிந்தன் நாயா், மருத்துவ கண்காணிப்பாளா் ஜேக்கப் ஜோஸ், இயக்குநா் திலிப் மத்தாய், தலைமை இயக்குதல் அலுவலா் மணிமாறன், பொது மேலாளா் நித்தின் சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →