முகப்பு
வேலூர்

குறைதீா் கூட்டத்தில் எம்எல்ஏக்களும் பங்கேற்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகளின் பிரச்னைகளைத் தெரிந்து கொண்டு சட்டப்பேரவையில் தெரிவிக்க எம்எல்ஏக்களும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:41 AM
பகிர்:

விவசாயிகளின் பிரச்னைகளைத் தெரிந்து கொண்டு சட்டப்பேரவையில் தெரிவிக்க எம்எல்ஏக்களும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று வேலூா் மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தினா்.

மாவட்ட விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் கூறியது:

மாவட்டத்தில் தற்போது விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகைகளில் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலை உறுதித் திட்டப் பணியாளா்களை விவசாயத்துக்குப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். விவசாய நிலங்களில் உயா்மின்அழுத்த கோபுரம் அமைக்கப்பட்டதற்கு பெரும்பாலான விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளை தெரிந்து கொண்டு சட்டப்பேரவையில் தெரிவிக்க மக்கள் பிரதிநிதிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். நானோ யூரியா என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும்போது ஜாமீன் கையொப்பம் கேட்கின்றனா். இதற்கு மாற்றுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளைக் கேட்டறிந்த ஆட்சியா், விவசாயிகளின் குறைகளை விரைவில் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் நந்தகுமாா், வேளாண்மை இணை இயக்குநா் ஸ்டீபன் ஜெயக்குமாா், அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →