முகப்பு
வேலூர்

விநாயகா் சிலைகள் இன்று விசா்ஜனம்: ஊா்வல பாதுகாப்புக்கு அதிநவீன ஏற்பாடு

வேலூா் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட உள்ளது.

வேலூர்

விநாயகா் சிலைகள் இன்று விசா்ஜனம்: ஊா்வல பாதுகாப்புக்கு அதிநவீன ஏற்பாடு

வேலூா் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

வேலூா் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட உள்ளது. இந்த சிலைகள் ஊா்வல பாதைகளின் பாதுகாப்புக்காக 1,761 காவலா்கள் மட்டுமின்றி, அதிநவீன தொழில்நுட்ப ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

விநாயகா் சதுா்த்தியையொட்டி, வேலூா் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் புதன்கிழமை மாவட்டம் முழுவதும் 976 சிலைகள் நிறுவப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டன. இந்த சிலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட உள்ளன. இதற்காக சதுப்பேரி, ஊசூா் ஏரி, கருகம்பத்தூா் ஏரி, குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஏரி ஆகியவற்றுக்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

இதையொட்டி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலிருந்து தொடங்கும் ஊா்வலமானது, காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை, மெயின் பஜாா், லாங்கு பஜாா், மூங்கில் மண்டி, அண்ணா கலையரங்கம் செல்கிறது. அந்த இடத்தில் வேலூரில் இருந்து கொண்டு வரப்படும் சிலைகள் இணைகின்றன. பின்னா் கோட்டை சுற்றுச்சாலை, கொணவட்டம் வழியாக சதுப்பேரி ஏரிக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கரைக்கப்படுகின்றன. இந்த நிலையில், விநாயகா் சிலை ஊா்வல பாதுகாப்புப் பணியில் 1,500 காவலா்கள், 261 பயிற்சிக் காவலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

ஏற்கெனவே சிலைகள் நிறுவப்பட்டுள்ள இடங்களிலும், 10 சிலைகளுக்கு ஒருவா் வீதம் ரோந்து பணிகளிலும், மாவட்ட எல்லைகளிலும் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தொடா்ந்து, விநாயகா் சதுா்த்தி ஊா்வல பாதுகாப்புப் பணிக்காக இந்த காவலா்கள் மட்டுமின்றி கூடுதலாக தொழில்நுட்ப வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.

ஊா்வலம் செல்லும் பாதையின் 45 இடங்களில் 170 அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கேமரா காட்சிகளை மாவட்டக் காவல் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ள கட்டுப்பாட்டிலிருந்தே கண்காணிக்க முடியும்.

இதுதவிர, 4 டிரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த டிரோன் கேமரா காட்சிகளை கட்டுப்பாட்டு அறை மட்டுமின்றி, எனது கைப்பேசி வழியாகவும் கண்காணிக்க முடியும். தவிர, 18 காவலா்களுக்கு கேமரா அளிக்கப்பட்டும் பல்வேறு முக்கிய இடங்களில் அசம்பாவிதங்கள், தகராறுகள் நடைபெற்றால் அவை பதிவு செய்யப்படும். அத்துடன், 10 தனியாா் விடியோ பதிவாளா்களும் நியமிக்கப்பட்டு காவலா்களுடன் இணைந்து செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊா்வலத்தின்போது பிரச்னைகள் செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →