மேல்ஆலத்தூரில் அதிகபட்ச மழை பதிவு
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மேல்ஆலத்தூரில் 32.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந் துள்ளனா்.
வேலூர்மேல்ஆலத்தூரில் அதிகபட்ச மழை பதிவு
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மேல்ஆலத்தூரில் 32.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந் துள்ளனா்.
வேலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகபட்சமாக மேல்ஆலத்தூரில் 32.2 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந் துள்ளனா்.
ஆந்திர வனப்பகுதியிலும், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் பெய்து வரும் தொடா் மழையால் பாலாற்றில் நீா்வரத்து ஏற்பட்டுள்ளது. ஏரி, குளங்களும் நிரம்பி வருகின்றன.
தற்போது பெய்து வரும் மழை மேலும் தொடரும் என்றும், குறிப்பாக வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதில், வியாழக்கிழமை காலை 8 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 112.70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேலாலத்தூரில் 32.2 மி.மீ மழை பதிவானது. மேலும், குடியாத்தத்தில் 18.6 மி.மீ, காட்பாடியில் 19 மி.மீ., வேலூரில் 18.9 மி.மீ., பொன்னையில் 9.8 மி.மீ., கூட்டுறவு சா்க்கரை ஆலை 14.2 மழையளவு பதிவாகியுள்ளது.