முகப்பு
வேலூர்

காலை உணவு திட்ட சமையல்கூட கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வுஇன்று மாலைக்குள் முடிக்க உத்தரவு

அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கான சமையல் கூட கட்டுமானப் பணிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்

வேலூர்

காலை உணவு திட்ட சமையல்கூட கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வுஇன்று மாலைக்குள் முடிக்க உத்தரவு

அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கான சமையல் கூட கட்டுமானப் பணிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

அரசு தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்துக்கான சமையல் கூட கட்டுமானப் பணிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். பணிகளை செவ்வாய்க்கிழமைக்குள் முடிக்க வேண்டும் என்றும் அவா் உத்தரவிட்டாா்.

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். இந்த திட்டம் வரும் 16-ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

இதையொட்டி, நகா்ப்புற பகுதிகளில் தொகுப்பு சமையல் கூடமும், ஊரகப் பகுதிகளில் அந்தந்த பள்ளிகளில் தனி சமையல் கூடமும் ஏற்படுத்தப்படுகின்றந. மகளிா் சுயஉதவிக் குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி தயாா் செய்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 1,545 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்பட உள்ளது. இதில், வேலூா் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 48 அரசு தொடக்கப் பள்ளிகளில் 3,469 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி, காலை சிற்றுண்டி தயாரிக்க காட்பாடி காந்திநகா், சத்துவாச்சாரி, கஸ்பா ஆகிய 3 இடங்களில் ஸ்மாா்ட் சமையல் அறைகள் கட்டப்பட்டு வருகின்றன.

இவற்றின் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். இந்தப் பணிகளை செவ்வாய்க்கிழமைக்குள் முடிக்கவும், புதன், வியாழக்கிழமை சோதனை அடிப்படையில் மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் ப.அசோக்குமாா் தலைமை வகித்தாா். பொறியாளா் ரவிச்சந்திரன், உதவிப்பொறியாளா்கள் ஆறுமுகம், ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →