திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா
வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்தனா்.
வேலூர்திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா
வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்தனா்.
வேலூா் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள திரெளபதி அம்மன் கோயிலில் தீமிதி விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தீமிதித்தனா்.
வேலூா் சத்துவாச்சாரியில் திரெளபதி அம்மன் உடனுறை தா்மராஜா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில், பக்தா்கள் மஞ்சள் நீராடி பக்திப் பரவசத்துடன் தீ மிதித்தனா்.
முன்னதாக, காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பூக்குழி தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. விழாவில் வேலூா் நகரின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை முத்தரையா் சமுதாய மக்கள், இளைஞரணியினா் செய்திருந்தனா்.