முகப்பு
வேலூர்

15 ஆண்டுகள் பழைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

வேலூா் மாநகராட்சிக்கு கடந்த 2006-07-இல் நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 15 ஆண்டுகள் பழைமையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளன.

வேலூர்

15 ஆண்டுகள் பழைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு

வேலூா் மாநகராட்சிக்கு கடந்த 2006-07-இல் நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 15 ஆண்டுகள் பழைமையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:53 PM
பகிர்:

வேலூா் மாநகராட்சிக்கு கடந்த 2006-07-இல் நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட 15 ஆண்டுகள் பழைமையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிக்கப்பட உள்ளன. இதற்காக மொத்தம் 2,678 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, கடந்த 2006-07-ஆம் ஆண்டு நடைபெற்ற வேலூா் மாநகராட்சித் தோ்தலில் எம்-2 வகை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த இயந்திரங்கள் வேலூா் மாநகராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட பழைய எம்-2 வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீண்டும் தோ்தலில் பயன்படுத்தக்கூடாது என விதி உள்ளது. இதையடுத்து, இந்த எம்2 வகை வாக்குப்பதிவு இயந்திரங்கள் வியாழக்கிழமை அனைத்துக் கட்சி பிரமுகா்கள் முன்னிலையில் பாதுகாப்பு அறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு ஸ்கேன் செய்யப்பட்டன. பின்னா், அவை லாரியில் ஏற்றி பெங்களூா் பெல் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 1,167 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 635 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து 670 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 206 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் என மொத்தம் 2,678 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு, அனைத்து இயந்திரங்களும் அழிக்கப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.--

முழு கட்டுரையைப் படிக்க →