வேலூர்

குடியாத்தம், போ்ணாம்பட்டு வனப் பகுதியில் ஜப்பான் குழு ஆய்வு

குடியாத்தம், போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் ஜப்பான் நாட்டின் ஜைகா திட்டக் குழுவினா் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா்.

DIN

குடியாத்தம், போ்ணாம்பட்டு வனச் சரகத்துக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் ஜப்பான் நாட்டின் ஜைகா திட்டக் குழுவினா் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனா்.

தமிழகத்தில் காடு வளா்ப்புத் திட்டத்தை மேற்கொள்ள ஜப்பான் நாட்டின் ஜைகா நிதியின் கீழ், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளை ஜைகா குழுவினா் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, மதிப்பீடு செய்து வருகின்றனா்.

அதன்படி, வேலூா் மாவட்டம், குடியாத்தம், போ்ணாம்பட்டு வனச் சரகங்களுக்கு உட்பட்ட வனப் பகுதிகளில் தீ விபத்து ஏற்படும் பகுதிகள், அதற்கான தடுப்புப் பணியில் வனத்தையொட்டிய கிராமங்களின் பங்களிப்பு உள்ளிட்டவை குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில் ஜைகா திட்டத்தின் பேராசிரியா் சசாகி ஹிராரி, இந்திய பிரதிநிதி பிஜான் குமாா் மித்ரா, ஐஐடி தில்லி பேராசிரியா் ராஜஷிதாஸ்குப்தா குழுவினா் ஈடுபட்டனா். அவா்களுடன் வேலூா் மண்டல வனப் பாதுகாவலா் சுஜாதா, மாவட்ட வன அலுவலா் கலாநிதி, உதவி வன அலுவலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்!

நெவர் எவர் அன்டர்எஸ்டிமேட் மீ!ரெட்ட தல டிரைலர்!

பனிமூட்டம்: தில்லி - ஆக்ரா விரைவுச் சாலையில் பேருந்துகள், கார்கள் அடுத்தடுத்து மோதல்! 4 பேர் பலி!

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 3,000 கன அடியாக குறைந்தது!

மேட்டூர் அணை நீர்மட்டம் 114.15 அடியாக சரிவு!

SCROLL FOR NEXT