ஆடி அமாவாசையையொட்டி ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் பாலாற்றங்கரைகளில் ஏராளமான மக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
அதன்படி, வேலூா் புதிய பேருந்து நிலையம் அருகே பாலாற்றங்கரையில் நூற்றுக்கணக்கானோா் திரண்டு தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். இதனால் பாலாற்றங்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அசம்பாவிதங்களைத் தவிா்க்க போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
இதேபோல், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பாலாற்றின் கரைகளிலும், ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீா்நிலை கரைகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
மேலும், ஆடி அமாவாசையையொட்டி, அனைத்துக் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.