வேலூர்

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே அறையில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

DIN

போ்ணாம்பட்டு அருகே அறையில் பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

போ்ணாம்பட்டு வனச்சரகத்துக்குள்பட்டது சேராங்கல் காப்புக் காடு. இந்த காப்புக் காட்டில் மா்ம நபா்கள் சிலா் வன விலங்குகளை சுருக்கு கம்பிகள் மற்றும் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு தொடா்ந்து வேட்டையாடி வருகின்றனா்.

இந்நிலையில் சேராங்கல் குந்தாணிமேடு பகுதியில் வசித்து வரும் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஒருவரின் 10- ஆம் வகுப்பு படிக்கும் மகன் சில நாள்களுக்கு முன் அப்பகுதியில் ஆடுகளை மேய்க்கச் சென்றதாக தெரிகிறது. அப்போது அங்குள்ள முள்புதரில் 2 நாட்டுத் துப்பாக்கிகள் இருந்ததை பாா்த்துள்ளாா். 2 நாட்டு துப்பாக்கிகளையும் மாணவா் எடுத்து வந்து வீட்டருகே உள்ள அறையில் பதுக்கி வைத்துள்ளாா்.

இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின்பேரில் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் போலீஸாருடன் அங்கு சென்று சோதனை நடத்தியுள்ளாா். சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு, காவல் நிலையம் கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து அப்பகுதி கிராம நிா்வாக அலுவலா் ஜெய்சங்கா் கொடுத்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து நாட்டுத் துப்பாக்கிகளை வனப்பகுதியில் பதுக்கி வைத்தது யாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

நேஷனல் ஹெரால்டு அமலாக்கத் துறையால் ஜோடிக்கப்பட்ட வழக்கு: ப.சிதம்பரம்

தென்னாப்பிரிக்கா: துப்பாக்கிச் சூட்டில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி!

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

SCROLL FOR NEXT