வேலூர்

குடியாத்தம் கிரிக்கெட் ப்ரீமியர் லீக்: ஏராளமான உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பு!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலக அளவில் ஐபிஎல் கிரிக்கெட் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பல்வேறு பெருநகரங்களில் பல்வேறு கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

DIN

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உலக அளவில் ஐபிஎல் கிரிக்கெட் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பல்வேறு பெருநகரங்களில் பல்வேறு கிரிக்கெட் லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரில் குடியாத்தம் கிரிக்கெட் பிரீமியர் லீக் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் 12 அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே அணிகளுக்காக வீரர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மற்றும் பெருநகரங்களில் நடைபெறும் கிரிக்கெட் அணி வீரர்கள் ஏலம் எடுப்பதை போல் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குடியாத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 370 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்திருந்தனர். ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்களை தேர்வு செய்து கொள்ளலாம் 

ஒரு அணிக்கு 15 ஆயிரம் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வீரர் ஐந்து முறை ஏலத்தில் பங்கேற்கலாம் இந்த குடியாத்தம் கிரிக்கெட் பிரிமியர் லீக் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தில் இருந்து தொடங்குகிறது. வெற்றி பெறும் அணிக்கு 50 ஆயிரம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் உள்ளூரிலிருந்து ஏராளமான கிரிக்கெட் வீரர்கள் ஆர்வத்துடன் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசத்தில் டெங்கு பரவல்! 24 மணிநேரத்தில் புதியதாக 1,147 பாதிப்புகள் உறுதி!

இரண்டு நாள் சுற்றுப்பயணம்! வேலூரில் துணை முதல்வர் நடைபயிற்சி!

பிளஸ் 2 கணக்குப்பதிவியல் தேர்வு: முதல்முறையாக கால்குலேட்டர் அனுமதி!

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! முதல்வர் ஸ்டாலின்

கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!

SCROLL FOR NEXT