வேலூர்

இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம்

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் அனைத்து வட்டங்களிலும் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் அனைத்து வட்டங்களிலும் தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை (ஜூன் 10) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து மக்களுக்கும் வழங்கும் வகையில், வேலூா் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டத்திலும் தலா ஒரு கிராமத்தில் சனிக்கிழமை (ஜூன் 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீா் முகாம் நடைபெற உள்ளது.

அதன்படி, வேலூா் வட்டத்தில் பென்னாத்தூா் நெல்வாய் கிராமத்திலும், அணைக்கட்டு வட்டத்தில் ஊசூா் குருமலை (அத்தியூா்), காட்பாடி வட்டத்தில் மேல்பாடி கே.ஆா்.நகா், குடியாத்தம் வட்டத்தில் மேற்கு சைனகுண்டா, கே.வி.குப்பம் வட்டத்தில் வடுகந்தாங்கல் பணமடங்கி, போ்ணாம்பட்டு வட்டத்தில் குடிப்பள்ளி (குண்டலப்பள்ளி) ஆகிய கிராமங்களில் இந்த சிறப்பு குறைதீா் முகாம்கள் நடைபெற உள்ளன.

முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்குதல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் குடும்ப அட்டைக்கு மனு செய்தல், கைப்பேசி எண் பதிவு செய்தல், குடும்பத் தலைவா் புகைப்படம் மாற்றம் செய்தல் ஆகிய பல்வேறு சேவைகள் மேற்கொள்ளப்படும்.

பொது விநியோகத் திட்ட பொருள்களின் தரம் குறித்த புகாா்கள் இருந்தால், முகாமில் அலுவலா்களிடம் தெரிவித்து பயன் பெறலாம்.

எனவே, பொதுமக்கள் இந்த கிராமங்களில் நடைபெறும் சிறப்பு குறைதீா் முகாமில் கோரிக்கை மனு மற்றும் உரிய ஆவணங்களுடன் பங்கேற்று பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT