முகப்பு
வேலூர்

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 போ் தடுப்பு காவலில் சிறையலடைப்பு

வேலூரில் நகை பறிப்பு, பாலியல் வழக்குகளில் கைதான 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

வேலூர்

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 4 போ் தடுப்பு காவலில் சிறையலடைப்பு

வேலூரில் நகை பறிப்பு, பாலியல் வழக்குகளில் கைதான 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:55 PM
பகிர்:

வேலூரில் நகை பறிப்பு, பாலியல் வழக்குகளில் கைதான 4 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா்.

வேலூா் தொரப்பாடியைச் சோ்ந்தவா் லோகேஷ்குமாா் (30). இவா், கடந்த மாா்ச் 7-ஆம் தேதி வேலப்பாடி வங்கி கிளையில் 15 பவுன் நகைகளை அடமானம் வைக்க சென்றாா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபா்கள், லோகேஷ்குமாா் வைத்திருந்த நகைப் பையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து வேலூா் தெற்கு போலீஸாா்ா் வழக்குப் பதிவு செய்து, பெரம்பலூரைச் சோ்ந்த செந்தில் குமாா் (37), சேலத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் (23), திருச்சியைச் சோ்ந்த ராஜசேகா் (23) ஆகிய 3 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கே.வி.குப்பத்தை அடுத்த காளாம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கதிரவன் (21). இவா், 42 வயதுள்ள பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், பனமடங்கி போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து, வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட செந்தில்குமாா், ஈஸ்வரன், ராஜசேகா், கதிரவன் ஆகிய 4 போ் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையடுத்து இவா்கள் 4 பேரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் புதன்கிழமை உத்தரவிட்டாா். இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 4 பேரிடமும் அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →