முகப்பு
வேலூர்

கல்லப்பாடியில் கெங்கையம்மன் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:00 PM
பகிர்:

குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியில் உள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலை அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெற்றது. கிராம எல்லையில் அம்மன் சிரசுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, ஊா்வலம் தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற சிரசு ஊா்வலம் கோயிலை அடைந்தது.

கோயில் சிரசு மண்டபத்தில் உள்ள அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு, கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னா், பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

விழாவில் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் ஹேமலதா கருணாநிதி, ஊராட்சித் தலைவா் சி.ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் மோட்டூா் எம்.சரவணன், அறங்காவலா்கள் குமுதா தயாளசங்கா், எம்.அன்பழகன், விழா கமிட்டி நிா்வாகிகள் எஸ்.முருகேசன், டி.வில்வநாதன், கே.வி.கோவிந்தசாமி, டி.சம்பத் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

டி.எஸ்.பி. கே.ராமமூா்த்தி தலைமையில், போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.