முகப்பு
வணிகம்

எச்.எஸ்.பி.சி. விதிமீறல்: ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத எச்.எஸ்.பி.சி. வங்கிக்கு ரூ.31.8 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Updated On : 20 மார்ச் 2026, 10:45 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: செயல்படாத கணக்குகள் மற்றும் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை குறித்த முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றாத ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கிக்கு (எச்.எஸ்.பி.சி.) ரூ.31.8 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

வங்கி தனது இணையதளத்தில் உரிமை கோரப்படாத வைப்புத்தொகை குறித்த தேடக்கூடிய தரவுகளை வழங்கவில்லை அல்லது உருவாக்கவில்லை என்ற நிலையில், 'வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு' நிதிக்கு மாற்றப்பட்ட சில உரிமை கோரப்படாத வைப்புத்தொகைகளுக்கு, உரிமை கோரப்படாத வைப்புத்தொகை குறித்த எண்ணை உருவாக்கி ஒதுக்கவில்லை.

வங்கியிடம் விசாரணையின் போது அதன் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

Advertisement

இந்த அபராதம் சட்ட மற்றும் ஒழுங்குமுறை இணக்கத்தில் உள்ள குறைபாடுகளின் அடிப்படையில் விதிக்கப்பட்டுள்ளது.

summary

The Reserve Bank on Friday said it has imposed a Rs 31.8 lakh penalty on Hongkong and Shanghai Banking Corporation for non-compliance with certain directions on inoperative accounts and unclaimed deposits.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.