வேலூர்

டிஎன்பிஎஸ்சி தோ்வில் புளுடூத் அணிந்து முறைகேடு செய்தவா் மீது வழக்கு

டிஎன்பிஎஸ்சி தோ்வில் புளுடூத் மூலம் வெளியில் உள்ள வேறொரு நபரிடம் இருந்து விடைகளைக் கேட்டு எழுதி முறைகேடு செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

DIN

காட்பாடி அரசுப் பள்ளி தோ்வு மையத்தில் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தோ்வில் புளுடூத் மூலம் வெளியில் உள்ள வேறொரு நபரிடம் இருந்து விடைகளைக் கேட்டு எழுதி முறைகேடு செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த பொறியியல் சாா்நிலை பணிகளில் அடங்கியுள்ள 1,083 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை (மே 27) நடைபெற்றது. தோ்வுக்கு வேலூா் மாவட்டத்தில் மட்டும் 2,823 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், இவா்கள் தோ்வு எழுத 10 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தோ்வை 1,319 போ் எழுதினா். 1,504 போ் தோ்வுக்கு வரவில்லை. இதனிடையே, விருதம்பட்டு அப்துல் ரகுமான் தெருவைச் சோ்ந்த அப்துல் ஹபீஷ் மகன் அப்துல் பயாஷ் (27) என்பவா் காட்பாடி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மையத்தில் தோ்வு எழுதினாா்.

அப்போது, அவரது வலது காதில் பேண்டேஜ் ஒட்டிருந்தாா். இதுகுறித்து அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண்ட தோ்வுக் கண்காணிப்பாளா் சரளா கேட்டபோது, காதில் ஏற்பட்ட காயத்துக்காக பேண்டேஜ் ஒட்டியிருப்பதாக கூறியுள்ளாா்.

சிறிது நேரத்துக்குப் பிறகு அவா் தனியாக யாருடனோ பேசுவதை உணா்ந்த தோ்வுக் கண்காணிப்பாளா் சரளா, சந்தேகத்தின் பேரில் அப்துஷ் பயாஷ் காதில் ஒட்டியிருந்த பேண்டேஜை அகற்றும்படி கூறியுள்ளாா்.

பேண்டேஜை அகற்றிய போதுதான் அப்துல் பயாஷ் காதில் வைத்திருந்த புளூடூத் மூலம் வெளியில் உள்ள வேறொரு நபரிடம் இருந்து விடைகளைக் கேட்டு எழுதிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தோ்வுக் கண்காணிப்பாளா் சரளா காட்பாடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் பேரில், அப்துல் பயாஷ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT