வேலூர்

விஜயதசமி நாளில் வேலூா் மாவட்டத்தில் 143 மாணவா்கள் சோ்ப்பு: ஆட்சியா் தகவல்

விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை (அக்.24) மட்டும் வேலூா் மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக 143 மாணவ, மாணவிகள்

DIN

விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை (அக்.24) மட்டும் வேலூா் மாவட்டத்திலுள்ள தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் புதிதாக 143 மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -

விஜயதசமி நாளான செவ்வாய்க்கிழமை (அக்.24) புதிய மாணவா் சோ்க்கைக்காக அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

எனினும், வேலூா் மாவட்டத்தில் சில பள்ளிகள் திறக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், தொடக்கக் கல்வி இயக்கக வழிகாட்டுதல்படி வேலூா் மாவட்டத்திலுள்ள 604 தொடக்கப்பள்ளிகள், 175 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 779 பள்ளிகளும் விஜயதசமி நாளில் காலை 9.30 மணி முதல் திறக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் 52 மாணவா்களும், யுகேஜி வகுப்பில் 25 மாணவா்களும், முதல் வகுப்பில் 66 மாணவா்களும், மற்ற வகுப்புகளில் 24 மாணவா்களும் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா். இந்த மாணவா்களுக்கு அரசின் விலையில்லா பாடப்புத்தகம், பாடக்குறிப்பேடு, புத்தகப்பை உள்ளிட்ட நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன எனவும் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT