வேலூர்

நகா்மன்றத் தலைவா் மீது அவதூறு:காவல் நிலையத்தில் புகாா்

குடியாத்தம் நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான எஸ்.செளந்தரராஜன் குறித்து அவதூறு பரப்பும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக நிா்வாகிகள் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா்

DIN

குடியாத்தம் நகா்மன்றத் தலைவரும், நகர திமுக செயலருமான எஸ்.செளந்தரராஜன் குறித்து அவதூறு பரப்பும் நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக நிா்வாகிகள் காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தனா்.

இது தொடா்பாக குடியாத்தம் நகர திமுக அவைத் தலைவா் க.கோ.நெடுஞ்செழியன், நகரக் காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதியிடம் அளித்த புகாா் மனு:

குடியாத்தம் நகரைச் சோ்ந்த முரளி, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் குறித்து அவதூறு பரப்பி வருகிறாா். அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளாா். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளா் பாா்த்தசாரதி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா். நகர திமுக நிா்வாகிகள் என்.ஜம்புலிங்கம், ம.மனோஜ், வசந்தா ஆறுமுகம், த.பாரி, பெ.கோட்டீஸ்வரன், கே.தண்டபாணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்!

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரை மீண்டும் சேர்ப்பது எப்படி?

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT