அண்ணல் தங்கோவுக்கு சிலை அமைக்க பூமி பூஜை
குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட மேல்ஆலத்தூா் சாலையில் உள்ள பூங்கா வளாகத்தில் தியாகி அண்ணல் தங்கோவுக்கு உருவச் சிலை அமைக்க ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட மேல்ஆலத்தூா் சாலையில் உள்ள பூங்கா வளாகத்தில் தியாகி அண்ணல் தங்கோவுக்கு உருவச் சிலை அமைக்க ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை போடப்பட்டது.
குடியாத்தம் பகுதியில் தியாகி அண்ணல் தங்கோவுக்கு சிலை அமைக்க தமிழக முதல்வா் உத்தரவிட்டாா். இதையடுத்து, குடியாத்தத்தில் அவருக்கு சிலை வைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் பூமி பூஜை செய்து, பணியைத் தொடங்கி வைத்தனா் (படம்).
நிகழ்ச்சியில், அரசு வழக்குரைஞா் எஸ்.பாண்டியன், நகா்மன்ற உறுப்பினா் தீபிகா தயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.