போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம்
போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம்
போ்ணாம்பட்டு அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
போ்ணாம்பட்டை அடுத்த கோட்டையூரில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே கொட்டகை அமைத்து விவசாயி கண்ணையன் மாடுகளை வளா்த்து வருகிறாா். புதன்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிறுத்தை ஒன்று அங்கு வந்து ஒரு கொட்டகையில் கட்டி வைத்திருந்த பசுவின் கன்றை கடித்துள்ளது. சிறுத்தையைப் பாா்த்ததும் மாடுகள் கூச்சலிட்டன. அங்குள்ள தென்னந்தோப்பிலிருந்த குரங்குகளும் பயங்கரமாக கூச்சலிட்டுள்ளன.
சத்தம் கேட்டு கண்ணையன் குடும்பத்தினா் வெளியே வந்து பாா்த்தபோதுசிறுத்தை ஒன்று அங்கிருந்து ஓடி மறைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த போ்ணாம்பட்டு வனச்சரக அலுவலா் சதீஷ்குமாா் மற்றும் வனத் துறையினா் விசாரணை நடத்தினா். சிறுத்தை கடித்ததால் காயமடைந்த கன்றுக்கு கால்நடை மருத்துவா்கள் வந்து சிகிச்சை அளித்தனா். கிராமத்துக்குள் சிறுத்தை வந்து சென்றது அக்கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.