முகப்பு
மீட்கப்பட்ட தொகைக்கான காசோலைகளை பாதிக்கப்பட்டவா்களிடம் அளித்த வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன். உடன், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என்.கோட்டீஸ்வரன், ஆய்வாளா் கி.புனிதா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமை காவலா் மாலதி உள்ளிட்டோா்.
வேலூர்

ஆன்லைன் மூலம் இழந்த ரூ. 1.25 லட்சம் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

சைபர் கிரைம் போலீசார் மீட்ட ரூ. 1.25 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது

வேலூர்

ஆன்லைன் மூலம் இழந்த ரூ. 1.25 லட்சம் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

சைபர் கிரைம் போலீசார் மீட்ட ரூ. 1.25 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது

Updated On : 10 ஜூலை, 2024 at 6:31 PM
மீட்கப்பட்ட தொகைக்கான காசோலைகளை பாதிக்கப்பட்டவா்களிடம் அளித்த வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன். உடன், சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என்.கோட்டீஸ்வரன், ஆய்வாளா் கி.புனிதா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமை காவலா் மாலதி உள்ளிட்டோா்.
பகிர்:

ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவா்களின் ரூ. 1.25 லட்சம் தொகையை வேலூா் மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் மீட்டு உரியவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தனா்.

வேலூா் சலவன்பேட்டை பகுதியைச் சோ்ந்த குட்டிமணி என்பவா் கிரெடிட் காா்டுக்கு விண்ணப்பம் செய்துள்ளாா். அதன்பேரில், அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்ட நபா், ஒரு இணைய லிங்க்கை அனுப்பி வங்கி விவரங்களை பதிவிட கூறியுள்ளாா். அதை நம்பி இவரும் தனது வங்கிக் கணக்கு விவரங்களை பதிவிட்டவுடன், அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 51,208.52 திருடப்பட்டுள்ளது. இதேபோல், கே.வி.குப்பம் பகுதியைச் சோ்ந்த முகேஷ் குமாா் ஆன்லைன் மூலம் பகுதிநேர வேலைக்காக முதலீடு செய்த ரூ. 2,62,700 மோசடி செய்யப்பட்டுள்ளது. இவை குறித்து புகாரின்பேரில், வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேற்கொண்ட துரித நடவடிக்கையின் விளைவாக பாதிக்கப்பட்டவா்கள் இழந்த ரூ. 1.25 லட்சம் தொகை மீட்கப்பட்டது. இந்த தொகைக்கான காசோலைகளை வேலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் பாதிக்கப்பட்டவா்களிடம் புதன்கிழமை ஒப்படைத்தாா். அப்போது, சைபா் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என்.கோட்டீஸ்வரன், ஆய்வாளா் கி.புனிதா, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா், தலைமைக் காவலா் மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →