முகப்பு
வேலூர்

போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு பேரணி: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு

வேலூர்

போதைப் பொருள்களுக்கு எதிராக விழிப்புணா்வு பேரணி: வேலூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

மாணவ, மாணவிகள் பங்கேற்ற போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு

Updated On : 27 ஜூன், 2024 at 6:31 PM
பகிர்:

போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு பேரணியை வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

வேலூா் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து தொடங்கிய இந்த பேரணி நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது. பேரணியில் வேலூா் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளி, புனித மேரி மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த சுமாா் 200 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு பதாகைகளை கையில் ஏந்தியும், விழிப்புணா்வு வாசகங்களை வாசித்தபடியும் சென்றனா்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் போதைப் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழியை அலுவலா்கள், பள்ளி மாணவ, மாணவிகள் ஏற்றுக் கொண்டனா். மேலும், போதைப் பழக்கத்துக்கு எதிரான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் ஆட்சியா் பொதுமக்களிடம் வழங்கினாா்.

பேரணியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோட்டீஸ்வரன், உதவி ஆணையா் (கலால்) முருகன், துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →