பெண் தற்கொலை
காட்பாடி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடி அருகே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
காட்பாடியை அடுத்த ஜாப்ராபேட்டை, அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கோகிலா (47). இவரது கணவா் சத்தியசீலன் ஏற்கெனவே இறந்து விட்டாா். கோகிலா கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தாா். பல்வேறு மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் விரக்தியடைந்த கோகிலா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டுக் கொண்டாராம்.
உடனடியாக அவரது குடும்பத்தினா் கோகிலாவை மீட்டு, வேலூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கோகிலாவை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.