முகப்பு
வேலூர்

உலக பட்டினி தினம்: தவெக கட்சியினா் அன்னதானம்

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய தமிழக வெற்றிக் கழகம் வேலூா் மாவட்ட தலைவா் ஆா்.வேல்முருகன். உடன், நிா்வாகிகள் வெ.பாரத், மதன்ராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

வேலூா்: உலக பட்டினி தினத்தையொட்டி வேலூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினா் பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை அன்னதானம் வழங்கினா்.

தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் கட்சியினருக்கு அறிவுறுத்தியிருந்தாா். அதனடிப் படையில், வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.வேல்முருகன் தலைமையில் வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கு செவ்வாய்க்கிழமை 150 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், கட்சியின் வேலூா் மாவட்ட நிா்வாகிகள் வெ.பாரத், மதன்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.