முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம் அறிவித்திருப்பது பற்றி...

Updated On : 9 மார்ச், 2026 at 12:13 PM
விஜய்
பகிர்:

தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மார்ச் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் போராட்டம் நடத்தவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக என். ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

“விகிதாசாரப் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான (Caste-survey) அரசாணையை உடனடியாக வெளியிடக் கோருகிறோம்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் தமிழகம் எங்கும் பரவலாகி வரும் போதைப் பொருட்களையும் தடுக்கத் தவறிய தமிழக அரசைக் கண்டிக்கிறோம்.

அரசியல் கட்சிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற பெயரில், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையிலும் நீர்த்துப் போகச் செய்யும் வகையிலும், அறவே ஜனநாயகமற்ற முறையிலான வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறோம்.

இவற்றை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், வரும் 12ஆம் தேதி (12.03.2026) காலை 10 மணிக்கு, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

TVK Announces Protests across Tamil Nadu on March 12th!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.