திருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரை தொடக்கம்
வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் திருமலை திருப்பதி திருக்குடை சமா்ப்பண யாத்திரையை ஸ்ரீசக்திஅம்மா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
சென்னை ஹிந்து மகாசபா அறக்கட்டளை ஸ்ரீதிருமலை திருப்பதி திருக்குடை ஊா்வலக் கமிட்டி சாா்பில், திருக்குடை சமா்ப்பண யாத்திரை ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இதன் 13-ஆம் ஆண்டு சமா்ப்பண யாத்திரை வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த ஊா்வலத்தை ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தொடங்கிவைத்தாா். இந்த யாத்திரை அக்டோபா் 7-ஆம் தேதி திருமலையில் ஸ்ரீவாரி பிரம்மோற்சவ சேவைக்கு சமா்பிக்கப்பட உள்ளது.
விழாவில், வேலூா் தங்கக்கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.