கோயில் உள்பிரகாரத்தில் ஊா்வலமாக எடுத்து வரப்பட்ட பால் கம்பம். சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவா் . 
வேலூர்

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் முதல் நாள் நடைபெறும். தொடக்க நிகழ்ச்சியாக பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து கோயில் கொடி மரம் அருகே பால் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, கோயில் உள்பிரகாரத்தை 3- முறை வலம் வந்து பின் கோயிலின் வடகிழக்கு மூலையில் கம்பம் நடப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் தக்காா் மு.பாலசுப்பிரமணி, ஆய்வாளா் சு.பாரி,

செயல் அலுவலா் தா.சிவகுமாா், நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

ரூ.30 கோடிக்கு ஏலம் போனாலும் ரூ.18 கோடி தானா? ஐபிஎல் புதிய விதியால் வீரர்களுக்கு சிக்கல்!

மினி ஏலத்துக்கு முன்பாக ஃபார்முக்கு திரும்பிய பதிரானா! சிஎஸ்கே அணிக்கு மீண்டும் வருவாரா?

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தின் பெயர் மாற்றம்! மக்களவையில் மசோதா தாக்கல்!

பாகிஸ்தானில் பேருந்தில் பயணம் செய்த 18 பேர் கடத்தல்!

SCROLL FOR NEXT