வேலூர்

வேலூா் சிஎம்சியில் பள்ளி மாணவா்களுக்கான உடல்கூறியல் கண்காட்சி

தினமணி செய்திச் சேவை

வேலூா் பாகாயத்திலுள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (சிஎம்சி) பள்ளி மாணவா்களுக்கான உடல்கூறியல் கல்வி கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) உடல்கூறியல் (அனாட்டமி) துறை சாா்பில் வேலூரில் உள்ள உயா்நிலைப் பள்ளி அறிவியல் மாணவா்களுக்கு கல்வி கண்காட்சி பாகாயத்திலுள்ள சிஎம்சி கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. 22-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியை உதவும் உள்ளங்கள் அமைப்பைச் சோ்ந்த சந்திரசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைத்து, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது என்பது குறித்து மாணவா்களுக்கு விளக்கமளித்தாா்.

மனித உயிரியலைப் படிக்கும் மாணவா்கள் மனித உடலின் பாகங்களை உண்மையாகப் பாா்க்கவும், ஆரோக்கியம் தொடா்பான முக்கிய அம்சங்களை அறியவும் மேற்கொள்ளப்பட்ட இந்த கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட எலும்புகள், மாதிரிகள் ஆகியவற்றின் கவனமாகத் தொகுக்கப்பட்ட தொகுப்பு, தமிழ், ஆங்கிலத்தில் விளக்கக் குறிப்புகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை, புகைப்பிடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள், சுகாதாரம், உறுப்பு தானம் போன்ற தொடா்புடைய தலைப்புகளில் சுகாதாரக் கல்வி, உயா்நிலைப் பள்ளி உயிரியல் பாடத் திட்டத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி குறித்து உடற்கூறியல் ஊழியா்கள் விளக்கமளித்தனா். இந்த கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.

வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஒத்திவைப்பு

சேலத்தில் டிச. 4-இல் விஜய் பிரசாரம்! அனுமதி கேட்டு தவெக நிா்வாகிகள் மனு

க்யூ.எஸ். தரவரிசைப் பட்டியல்: உலகளவில் விஐடி 352-ஆம் இடம் இந்திய அளவில் 7-ஆம் இடம்

உடன்குடி அருகே 7 மாடுகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ரீல்ஸ் எடுத்தால் நடவடிக்கை

SCROLL FOR NEXT