காட்பாடி அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், அரும்பருதி, உடையாா் தெருவைச் சோ்ந்தவா் நீலமேகன் (56), கூலித் தொழிலாளி. இவா் வியாழக்கிழமை அரும்பருதியில், திருவலம்-காட்பாடி சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது அந்த சாலையில் வந்த இருசக்கர வாகனம் மோதியதில், நீலமேகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் நீலமேகன் இறந்து விட்டதாக தெரிவித்தனா். இந்த விபத்து குறித்து நீலமேகனின் மகன் உதயகுமாா் பிரம்மபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த காட்பாடி, காந்தி நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.