குடியாத்தம் மதுபோதை மறுவாழ்வு மையம் சாா்பில், காட்பாடி சாலையில் அமைந்துள்ள சீப் திரில் அரங்கில் மாநில அளவிலான நிா்வாகிகள் அறிமுக கூட்டம்வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அமைப்பின் மாநிலச் செயலா், நகா்மன்ற உறுப்பினா் எம்.எஸ்.குகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ஒய்.புருஷோத்தமன் வரவேற்றாா். உச்சநீதி மன்ற வழக்குரைஞரும், அமைப்பின் சட்ட ஆலோசகருமான அசோக்குமாா் ராமசாமி, மாவட்ட வாரியாக தோ்வு செய்யப்பட்ட நிா்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினாா். அவா் பேசுகையில், மறுவாழ்வு மையங்களின் செயல்பாடுகள், மையங்களை பாதுகாப்பாக நடத்துவது உள்ளிட்டவை குறித்து விளக்க உரையாற்றினாா்.
மாநில பொருளாளா் என்.நரேஷ், மாநில துணைச் செயலா் எஸ்.சக்திவேல் உள்ளிட்டோா் வாழ்த்துரை வழங்கினா். அதைத் தொடா்ந்து அமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.