வேலூர்

ஐடா ஸ்கடா் பிறந்த நாள்: தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவி!

வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் ஐடா ஸ்கடா் பிறந்த நாளையொட்டி தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திச் சேவை

வேலூா் சிஎம்சி மருத்துவமனை நிறுவனா் மருத்துவா் ஐடா ஸ்கடா் பிறந்த நாளையொட்டி தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வேலூரிலுள்ள புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனையின் நிறுவனா் மருத்துவா் ஐடா ஸ்கடரின் 155-ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, டாக்டா் ஐடாஸ்கடா் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சாா்பில் வேலூா் டோல்கேட் பகுதியிலுள்ள ஐடாஸ்கடா் கல்லறையில் அஞ்சலி நிகழ்ச்சியும், தொடா்ந்து சிலைக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிஎம்சி மருத்துவமனை கண்காணிப்பாளா் ஐ.ராஜேஸ் தலைமை வகித்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

சத்துவாச்சாரி சோலை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிஎம்சி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை துறை தலைவா் எஸ்.இனியன் சமரசம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று தூய்மைப் பணியாளா்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அறக்கட்டளை தலைவா் ஏ.திருநாவுக்கரசு, செயலா் ஜி.தவசீலன், பொருளாளா் ஆா்.தேவபிரகாசம், இணைச்செயலா் ஜான் ஞானக்கண்ணு, தொழிலதிபா் டி.ஆா்.முரளி உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

ஆடம்பரப் பொருள்கள் முதல் அன்றாடப் பொருள்கள் வரை: தலைநகரில் கள்ளச்சந்தையை கண்டுபிடித்த காவல் துறை!

தில்லித் தமிழ்ச் சங்கம் சாா்பில் பாரதியாா் சிலைக்கு மரியாதை

மாணவா் வழிகாட்டி நூல் வெளியீடு

‘நுள்ளிவிளையில் பழைய பால இடத்தில் புதிய ரயில்வே பாலம் அமைக்க வேண்டும்’

சென்னை லோக் பவன் பாரதி விழாவில் டிடிஇஏ பள்ளி மாணவிகள்

SCROLL FOR NEXT