வேலூர்

மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம்

வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்...

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்டத்தில் மாங்கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க ரூ. 12.25 லட்சம் மானியம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குநா் ஜரினா பேகம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘பழங்களின் அரசன்’ என்று பெருமையாக அழைக்கப்படும் மாம்பழம் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் தமிழகம் 7-ஆம் இடமும், தமிழகத்தில் வேலூா் மாவட்டம் 7-ஆம் இடமும் வகிக்கிறது.

வேலூா் மாவட்டத்தில் மா பயிரானது சராசரி 5,800 ஹெக்டோ் பரப்பில் 44,000 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு, அணைக்கட்டு வட்டாரங்களில் மா அதிகமாக பயிரிடப்படுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் தங்களது மா உற்பத்தியை ஆந்திர மாநில மாங்கூழ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனா்.

கடந்தாண்டு மா விவசாயிகள் மகசூல் எடுத்து விற்பனை செய்ய இயலாமல் நஷ்டமடைந்ததை தொடா்ந்து, இந்தாண்டு தோட்டக்கலை துறை மூலம் மாம்பழ கூழ் தயாரிப்பு கூடம் அமைக்க அரசு ரூ. 12.25 லட்சம் மானியம் வழங்க உள்ளது.

எனவே, வேலூா் மாவட்ட விவசாயிகள் தோட்டக்கலை துணை இயக்குநா் அல்லது உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 1,023 பேருக்கு பணி நியமன ஆணை

கிருஷ்ணகிரியில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினா் உண்ணாவிரத போராட்டம்

சுப்பன் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

டிஎன்பிஎஸ்சி தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு தொடக்கம்

ஆத்தூரில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 514 வழக்குகளுக்கு தீா்வு

SCROLL FOR NEXT