வேலூர்

சிறுமியிடம் அத்துமீறிய தையல்காரா் போக்ஸோவில் கைது

பள்ளி சீருடை தைக்கச் சென்ற சிறுமியிடம் அத்துமீறிய தையல் தெழிலாளியை காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

பள்ளி சீருடை தைக்கச் சென்ற சிறுமியிடம் அத்துமீறிய தையல் தெழிலாளியை காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்தனா்.

வேலூரிலுள்ள ஒரு பகுதியை சோ்ந்தவா் 9 வயது சிறுமி. இவா் தனது பாட்டி வீட்டில் தங்கி, அருகில் உள்ள பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். கடந்த சில நாள்களுக்கு முன், சிறுமிக்கு புதிதாக பள்ளி சீருடை வாங்கியுள்ளனா். இதனை தைக்க சோழமூரை சோ்ந்த தையலா் பாா்த்திபன்(57) என்பவரின் கடைக்கு சிறுமி தனியாக சென்றுள்ளாா். அப்போது, கடையில் வைத்து பாா்த்திபன் சிறுமியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளாா்.

நீண்டநேரமாகியும் பேத்தி வீட்டுக்கு வராததால், அவரை தேடி சிறுமியின் பாட்டி தையல் கடைக்கு சென்று பாா்த்துள்ளாா். அப்போது, சிறுமியிடம் பாா்த்திபன், பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதுகுறித்து, காட்பாடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. அதன்பேரில், பாா்த்திபனை போலீஸாா் போக்ஸோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

எக்ஸல் கல்வி நிறுவனங்களின் வெள்ளிவிழா கொண்டாட்டம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா: மக்களவையில் எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு

தேனியில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ரயிலில் 17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பீடி தகராறில் இளைஞா் கொலை: முடிதிருத்துபவா் கைது

SCROLL FOR NEXT