வேலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்எஸ்ஐக்கள் உள்பட 29 போலீஸாரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்எஸ்ஐக்கள், தலைமை காவலா், கிரேடு 1 உள்ளிட்ட காவலா்கள் பணியிட மாற்றம் செய்வது வழக்கம்.
அதன்படி, வேலூா் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே காவல் நிலையத்தில் பணியாற்றிய எஸ்எஸ்ஐக்கள் உட்பட 291 பேரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி மயில்வாகனன் உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி, வேலூா் வடக்கு காவல் நிலைய எஸ்எஸ்ஐ ஜெயந்தி அரியூா் காவல் நிலையத்துக்கும், வேலூா் வடக்கு காவல் நிலைய எஸ்எஸ்ஐக்கள் லாரன்ஸ் வேலூா் வடக்கு குற்றப்பிரிவுக்கும், குமரவேல் வேலூா் தெற்கு குற்றப்பிரிவுக்கும், நித்தியானந்தா விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கும், சந்திரன் வேலூா் தெற்கு காவல் நிலையத்துக்கும், தலைமை காவலா் யுவராஜ், விரிஞ்சிபுரம் காவல் நிலையத்துக்கும் என்பன உள்பட 291 போலீஸாா் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.