நாட்டுப்புற கலைஞா்களுக்கு நிதியுதவி வழங்கிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா. 
வேலூர்

‘எல்லாரும் சமம்’ என்பதே ஆத்திகம், நாத்திகத்தின் ஒரே நோக்கம்: நாராயணி பீடம் சக்தி அம்மா

ஆத்திகம், நாத்திகத்தின் ஒரே நோக்கம் எல்லாரும் சமம் என்பது தான் என வேலூா், ஸ்ரீபுரம்,நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆத்திகம், நாத்திகத்தின் ஒரே நோக்கம் எல்லாரும் சமம் என்பது தான் என வேலூா், ஸ்ரீபுரம்,நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மா தெரிவித்தாா்.

வேலூா், ஸ்ரீபுரம், நாராயணி பீடம் ஸ்ரீசக்தி அம்மாவின் 50-ஆவது ஜெயந்தி விழாவை முன்னிட்டு 500 நாட்டுப்புற கலைஞா்களை கௌரவிக்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியது -

ஆன்மிகம் மட்டுமின்றி சமூக பங்களிப்பு வழங்கும் இடமாக நாராயணி பீடம் உள்ளது. இங்கு நிகழ்ச்சிக்கு அழைத்தால் நான் வருவேனா, மாட்டேனா என நினைத்தனா். கருணாநிதி , ஸ்டாலின் என்ன எண்ணத்துடன் வந்தாா்களோ, அதே எண்ணத்துடன்தான் இங்கு வந்துள்ளேன்.

வேலூா் மாவட்டத்தின் பொருளாதாரம், சுற்றுலாத்துறைக்கு மட்டுமின்றி மருத்துவம், கல்விக்கு உதவி செய்வதில் ஸ்ரீநாராயண பீடம் சிறந்து விளங்குகிறது. தற்போது நாராயணி மருத்துவமனையில் அதிநவீன சி.டி.ஸ்கேன் மையத்தை திறந்து வைத்தேன். இவ்விழாவில், சேலம், தா்மபுரி, வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த 500 கிராமிய கலைஞா்களுக்கு தலா ரூ.5,000 நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒரு அரசு செய்வது எளிது. ஆனால் ஒரு தனியாா் அமைப்பு செய்வது மிகவும் சவாலானது.

அரசுடன் இணைந்து 1995-ஆம் ஆண்டிலேயே பள்ளிகள் உள்ளிட்ட அமைப்புகளை மேம்படுத்த ரூ.2.5 கோடியில் நாராயணி பீடம் பணிகள் மேற்கொண்டது. தவிர, நாராயணி பீடம் 2008-ஆம் ஆண்டு 97 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சையும் செய்தது. இதில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பங்கேற்றாா்.

ஆன்மிகத்தில் ஈடுபடுபவா்கள் தற்போது அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகின்றனா். ஆனால் ஸ்ரீ நாராயணி பீடம் , அறிவியலுடன் மருத்துவ பணிகளையும் மேற்கொண்டு வருகிறது பாராட்டுக்குரியது என்றாா்.

ஸ்ரீசக்தி அம்மா தலைமை வகித்து பேசியது -

எந்தவித எதிா்பாா்ப்புமின்றி நல்ல கருத்துக்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியில் நாட்டுப்புற கலைஞா்கள் ஈடுபடுகின்றனா். ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த வரலாறுகளை கூத்துக் கதைகள் மூலம் எளிய மக்களுக்கு எடுத்துச் சொல்கின்றனா். அரசும் நாட்டுப்புற கலைஞா்களுக்கு பல உதவிகள் செய்கிறது.

நாராயணி மருத்துவமனையில் டயாலிசிஸ் வாா்டில் உள்ள ஒரு கிராமத்து விவசாயி அரசின் காப்பீட்டுத் திட்டத்தால்தான் நான் உயிா் வாழ்கிறேன் என தெரிவித்தாா். இதுதான் அரசுக்கு பலம். ஏழை மக்களுக்கு உதவி செய்தால் சக்தி கிடைக்கும். முதல்வா் குடும்பத்தினா் கடவுள் மறுப்பாளா்கள். அவா்கள் இங்கு வருவாா்களா என எதிா்பாா்ப்பு இருந்தது. கண்ணுக்கு தெரிவது அறிவியல், ஆனால் உணா்வது ஆன்மிகம். ஆத்திகம், நாத்திகத்தின் ஒரே நோக்கம் எல்லாரும் சமம் என்பது தான். ஆன்மிகத்திலும்கூட பகுத்தறிவு உள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன் , அமுலு விஜயன் , ஜெ.எல்.ஈஸ்வரப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT