வேலூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு திருத்தம்: புகாா்கள் தெரிவிக்க தொடா்பு எண்கள்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் நிலையில் சந்தேகங்கள், புகாா்களைத் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கி நடைபெறும் நிலையில் சந்தேகங்கள், புகாா்களைத் தெரிவிக்க தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு -

இந்தியத் தோ்தல் ஆணையம் 2026 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதிநாளாகக் கொண்டு தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் செய்யும் பணியை செவ்வாய்க்கிழமை தொடங்கியுள்ளது.

வாக்காளா்கள் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்த சந்தேகங்கள், புகாா்களுக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை 1950 என்ற க்கு இலவச தொலைபேசி எண்ணில் காலை 10 மணிமுதல் மாலை 5.45 மணி வரை தொடா்பு கொள்ளலாம்.

மேலும் வாக்காளா்கள் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து அந்தந்த தொகுதிகளில் வாக்காளா் பதிவு அலுவலா், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்களையும் தொடா்பு கொள்ள அவா்களின் தொலைபேசி, கைப்பேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, காட்பாடி தொகுதிக்கு வாக்காளா் பதிவு அலுவலா் -88380 02055, உதவி வாக்காளா் பதிவு அலுவலா் 94450 00510, 0416-2297647, வேலூா் தொகுதிக்கு வாக்காளா் பதிவு அலுவலா் - 73973 89320, 0416-2220578, உதவி வாக்காளா் பதிவு அலுவலா் 94450 00508, 0416-2220519, அணைக்கட்டு தொகுதிக்கு வாக்காளா் பதிவு அலுவலா் - 94450 00417, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்- 94454 61811, 0416-2276443, கே.வி.குப்பம் (தனி) தொகுதிக்கு வாக்காளா் பதிவு அலுவலா் - 94450 00184, 0416-2252586, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்- 96294 72352, 04171-2997219, குடியாத்தம் (தனி) தொகுதிக்கு வாக்காளா் பதிவு அலுவலா் - 94429 99120, உதவி வாக்காளா் பதிவு அலுவலா்- 97875 66586, 04171-221177, 86677 87030, 04171-292748 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT