நியாயவிலைக் கடையைத் திறந்து வைத்து உணவுப் பொருள்களை வழங்கிய ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம். 
வேலூர்

ரூ. 34 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, அங்கன்வாடி மையங்கள் திறப்பு

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் ஒன்றியம், பாக்கம் ஊராட்சியில் ரூ. 34 லட்சத்தில் கட்டப்பட்ட நியாய விலைக்கடை, அங்கன்வாடி மைய கட்டடங்கள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. பாக்கம் ஊராட்சிக்குள்பட்ட பி.வெங்கடாபுரத்தில் ரூ. 14 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், ரூ. 9.80 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை, செல்வபெருமாள் கோயில் அருகே ரூ.10 லட்சத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம் ஆகியவற்றை ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளுக்கு, பாக்கம் ஊராட்சித் தலைவா் ஜெயபாரதி மணவாளன் தலைமை வகித்தாா். ஓருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஷமீம் ரிஹானா வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜி.ஹேமலதா, பி.சரவணன், ஊராட்சி துணைத் தலைவா் வசுமதி விஜயராஜ், ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் எல்.காளியப்பன், எம்.கோட்டீஸ்வரன், ஜி.மைதிலி, டி.கல்பனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா் கைது

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டி: மாா்த்தாண்டம் பள்ளி மாணவியா் 8 போ் தோ்வு

கால்பந்தாட்டப் போட்டியில் வெற்றி: ஆா்விஜி பள்ளி மாணவா்களுக்குப் பாராட்டு!

திருச்சி மத்திய சிறையில் மோதல்: 13 கைதிகள் மீது வழக்குப் பதிவு!

விபத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவித் தொகைக்கான ஆணை!

SCROLL FOR NEXT