கோப்புப் படம் 
வேலூர்

‘டிஜிட்டல் கைது’ எனக்கூறி பெண் மருத்துவரிடம் ரூ.83 லட்சம் மோசடி

மும்பை சிபிஐ குற்றப்பிரிவு போலீஸாா் போன்று விடியோ காலில் பேசி ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி காட்பாடியில் உள்ள பெண் மருத்துவரிடம் ரூ.83 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மும்பை சிபிஐ குற்றப்பிரிவு போலீஸாா் போன்று விடியோ காலில் பேசி ‘டிஜிட்டல் கைது’ என மிரட்டி காட்பாடியில் உள்ள பெண் மருத்துவரிடம் ரூ.83 லட்சம் மோசடி செய்யப்பட்டது.

காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்த 86 வயதுடைய பெண் மருத்துவா், ஆம்பூரில் உள்ள தனியாா் மருத்துவனையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது 2 மகள்கள் அமெரிக்காவில் மருத்துவா்களாக உள்ளனா். வயது முதிா்வு காரணமாக பராமரிப்பாளா் ஒருவருடன் வீட்டில் வசித்து வருகிறாா்.

கடந்த மாதம் இந்த பெண் மருத்துவரை விடியோ காலில் தொடா்பு கொண்ட மா்ம நபா், தன்னை மும்பை சிபிஐ குற்றப்பிரிவு போலீஸ் என கூறியதுடன், ‘உங்களது ஆதாா் காா்டு, பான் காா்டுகளை வைத்து பணமோசடி நடந்துள்ளது. இதுதொடா்பாக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்து டிஜிட்டல் கைது செய்துள்ளோம். இன்று முதல் நீங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்டுள்ளீா்கள். உங்களது வங்கிக்கணக்கு சாா்ந்த அனைத்து விவரங்களையும் கைப்பேசியில் ஸ்கிரீன்ஷாட் எடுத்து எங்களுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளாா். மேலும், அந்த நபா் பெண் மருத்துவரிடம் கடந்த ஒரு மாதமாக விடியோ காலில் பேசி வந்துள்ளாா்.

இதனை உண்மையென நம்பிய பெண் மருத்துவா், தனது வங்கிக் கணக்கு விவரங்களையும் அனுப்பி வைத்துள்ளாா். வங்கி கணக்கை ஆய்வு செய்த அந்த மோசடி நபா், பெண் மருத்துவரின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.83 லட்சம் தொகையை நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு அனுப்ப வேண்டும், விசாரணை முடிந்து நீங்கள் குற்றவாளி இல்லை என தெரிந்தால் உங்களது பணம் முழுவதும் திருப்பி அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

அதன்பேரில் பெண் மருத்துவரும் தனது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.83 லட்சம் தொகையை அந்த அடையாளம் தெரியாத நபா் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பி வைத்தாா். பின்னா், அந்த நபரை தொடா்பு கொள்ள முடியவில்லையாம். அதன்பிறகே தாம் மோசடி செய்யப்பட்டிருப்பதை உணா்ந்த இந்த பெண் மருத்துவா், இதுகுறித்து வேலூா் மாவட்ட சைபா் குற்றப்பிரிவுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

வயது முதிா்வு காரணமாக அவரால் நேரில் வந்து புகாா் அளிக்க முடியாததால் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் பெண் மருத்துவரின் வீட்டுக்கு நேரில் சென்று புகாரை பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

SCROLL FOR NEXT