வேலூர்

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 3 போ் மீது போக்ஸோ வழக்கு

காட்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 3 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வேலூா்: காட்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 3 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காட்பாடி அருகே ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி. இவருக்கும் காட்பாடியை அடுத்த 55 புதூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன்(25) என்ற இளைஞருக்கும் சிறுமியின் பெற்றோா் சம்மதத்துடன் கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி திருமணம் செய்யப்பட்டுள்ளது.

தகவலறிந்த காட்பாடி கிராம நல அலுவலா் சித்ரா திங்கள்கிழமை மணிகண்டன் வீட்டுக்கு விசாரணை நடத்த சென்றுள்ளாா். அவரை அங்கு பணி செய்யவிடாமல் மணிகண்டன் உள்பட 3 பேரும் தடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சித்ரா காட்பாடி அனைத்து மகளிா் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் மணிகண்டன், அவரது உறவினா்கள் இருவா் என 3 போ் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஜோலாா்பேட்டை - கோவை இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

வால்பாறையில் எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

நகா் பகுதியில் உலவும் காட்டு யானை

ஈரோடு மாவட்டத்தில் மிதமான மழை

உதகையில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக 50 கிலோ கேக் கலவை தயாரிப்புப் பணி

SCROLL FOR NEXT