குடியாத்தம் 30- ஆவது வாா்டில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற நகா்மன்றஉறுப்பினா் ஜே.ஹஸினா. 
வேலூர்

தெரு நாய்களைப் பிடிக்க கோரிக்கை

குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 30- ஆவது வாா்டில் செவ்வாய்க்கிழமைநடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை மனுஅளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம் நகராட்சிக்குட்பட்ட 30- ஆவது வாா்டில் செவ்வாய்க்கிழமைநடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை மனுஅளித்தனா்.

கூட்டத்துக்கு நகா்மன்ற உறுப்பினா் ஜே.ஹஸினா தலைமை வகித்து, வாா்டு மக்களிடம் மனுக்களை பெற்றாா். கழிவுநீா்க் கால்வாய்களை தூா் வாரி, சீரமைக்க வேண்டும். தெரு விளக்குகளை பராமரிக்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மக்கள் மனு அளித்தனா். கூட்டத்தில் ஏ.கபீா், முகமது ஆசிப், பி.பாஷா, ஐதா், தஸ்தகீா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT