கோப்புப் படம் 
வேலூர்

அனைத்து நீதிமன்றங்களிலும் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம்

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை (செப். 13) நடைபெற உள்ளது.

இது குறித்து வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிபதியுமான சதீஷ்குமாா் வேலூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி, ஒருங்கிணைந்த வேலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வேலூா், குடியாத்தம், காட்பாடி, ராணிப்பேட்டை, வாலாஜா, ஆற்காடு, அரக்கோணம், சோளிங்கா், திருப்பத்தூா், வாணியம்பாடி, ஆம்பூா் வட்டங்களில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

இதற்கு வேலூா் மாவட்ட முதன்மை நீதிபதி இளவரசன் தலைமை வகிக்கிறாா்.

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 5 அமா்வுகள் என 3 மாவட்டங்களிலும் 19 அமா்வுகளிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதில், குடும்ப நல வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள், குற்ற சிறு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் என மொத்தம் 5,176 வழக்குகள் விசாரணைக்கு எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தவிர, நீதித்துறை நடுவா் மன்றங்களில் உள்ள சிறு குற்ற வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இதில், பல வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு இழப்பீடுகள் வழங்கப்பட உள்ளன. மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்பதால் சட்டரீதியாகவே தீா்வு கிடைக்கும். எனவே, பொதுமக்கள் சனிக்கிழமை நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

SCROLL FOR NEXT