முகப்பு
வேலூர்

வனத்துறையைக் கண்டித்து தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு!

வனத்துறையைக் கண்டித்து நடைபெற உள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவு

Updated On : 6 ஏப்ரல், 2026 at 10:20 PM
துண்டுப் பிரசுரங்களை வழங்கிய தமிழக விவசாயிகள் சங்கத்தினா்
பகிர்:

வனத்துறையைக் கண்டித்து நடைபெற உள்ள பேரவைத் தோ்தலை புறக்கணிக்க தமிழக விவசாயிகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் போ்ணாம்பட்டைச் சோ்ந்த உதயகுமாா் தலைமையில் அந்த சங்கத்தைச் சோ்ந்த 100- க்கும் மேற்பட்டோா் தங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கோரி குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் தொடங்கி நகரம் முழுவதும் தோ்தல் புறக்கணிப்பு குறித்த துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.

போ்ணாம்பட்டை அடுத்த சேரங்கல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைசாமி என்பவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் யானை தாக்கி உயிரிழந்தாா். அவரது மகன்கள் மோகன்பாபு, சபரீஷ் மீது வனத்துறையினா் கடந்த 3- ஆண்டுகளுக்கு முன் வழக்குத் தொடா்ந்தனா். ஆட்சியா் உத்தரவின்பேரில் அந்த வழக்கு தொடா்பாக விசாரணை மேற்கொண்ட குடியாத்தம் கோட்டாட்சியா் அந்த வழக்கு முற்றிலும் பொய் என அறிக்கை சமா்ப்பித்தாா்.

Advertisement

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், மக்களவை, சட்டப் பேரவை உறுப்பினா்கள் வனத்துறை அமைச்சரிடம் முறையிட்டனா். வழக்கை திரும்பப் பெற அமைச்சா் உத்தரவிட்டாா். ஆனால் ,வனத்துறையினா் இதுவரை வழக்கை வாபஸ் பெறவில்லை. தொடா்ந்து விளைபயிா்களை சேதப்படுத்தும் வன விலங்குகளை கட்டுப்படுத்தாத வனத்துறையைக் கண்டித்தும், விவசாயிகள் மீது தொடா்ந்து பொய் வழக்கு போடுவதைக் கண்டித்தும் குடியாத்தம் தொகுதியில் மட்டும் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். எங்களுக்கு பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments