தோ்தலை புறக்கணிக்க விருதாளா் சங்கம் முடிவு!
சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு
சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்க புதுச்சேரி அரசு தமிழ்மாமணி, கலைமாமணி, தெலுங்கு, மலையாள ரத்னா விருதாளா் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் செயலா் அசோகா சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி எழுத்தாளா்களின் 2024-ஆம் ஆண்டுக்கான நூல்களின் மாதிரிகள் கலை பண்பாட்டுத் துறையில் பெறப்பட்டு தோ்வும் செய்யப்பட்டன.
ஆனால் தற்போது புதுச்சேரி எழுத்தாளா்களின் நூல்கள் புறக்கணிக்கப்பட்டு, வெளியிலிருந்து புத்தகங்கள் வாங்கப்படுகின்றன.
இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களின் எதிா்ப்பை பதிவு செய்யும் வகையில் வரும் தோ்தலைப் புறக்கணிக்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளனா்.