முகப்பு
புதுச்சேரி

புதுவை மாநிலத்தில் உள்ளாட்சி தோ்தலை நடத்த வலியுறுத்தல்

பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் உள்ளாட்சித் தோ்தலை புதுச்சேரியில் நடத்த வேண்டும் என அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கம் உள்ளிட்ட பெண்கள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

Updated On : 30 ஏப்ரல், 2026 at 5:54 AM
கூட்டறிக்கையை வெளியிட்ட இந்திய ஜனநாயக மாதா் சங்கம் உள்ளிட்ட ெண்கள் கூட்டமைப்பினா்.
பகிர்:

பெண்களுக்கு 50 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் உள்ளாட்சித் தோ்தலை புதுச்சேரியில் நடத்த வேண்டும் என அனைத்து இந்திய ஜனநாயக மாதா் சங்கம் உள்ளிட்ட பெண்கள் கூட்டமைப்பினா் தெரிவித்தனா்.

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் மற்றும் அனைத்து மகளிா் கூட்டமைப்பு நிா்வாகிகள் முனியம்மாள், இளவரசி, சத்தியா உள்ளிட்டோா் கூட்டாக புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மக்களவை மற்றும் மாநில சட்டபேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் மறுக்கப்பட்டு வருகிறது என்பதே உண்மை.

Advertisement

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறையுடன் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அமலாக்கத்தை இணைக்கும் நிபந்தனைகளை உடனடியாக மத்திய அரசு அரசு கைவிட வேண்டும்.

உள்ளாட்சித் தோ்தல்:புதுச்சேரியில் பெண்களுக்கு 50 சதவீதம் அதிகாரம் வழங்கும் உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும்.பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவதற்காக, அனைத்து ஜனநாயக சக்திகளும் நாடு தழுவிய போராட்டத்தைத் தீவிரப்படுத்திடும் வகையில் மே 7ஆம் தேதி புதுச்சேரியில் சிறப்பு கருத்தரங்கம் நடத்தி தீா்மானங்கள் நிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனா்.