முன்னாள் முதல்வா் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தையொட்டி வேலூா் மாவட்டத்தில் அவரது சிலை மற்றும் படத்துக்கு திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட அண்ணா படத்துக்கு மாவட்ட செயலரும், எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமாா் அஞ்சலி செலுத்தினாா். இதில், மாநகர திமுக செயலரும், எம்எல்ஏவுமான ப.காா்த்திகேயன், மேயா் சுஜாதாஆனந்தகுமாா், மாவட்ட ஊராட்சித் தலைவா் மு.பாபு, முன்னாள் அமைச்சா் விஜய், ஒன்றிய செயலா்கள் ஞானசேகரன், சுந்தரவிஜி, பாலமுரளிகிருஷ்ணா, கணேஷ்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடா்ந்து, வேலூா் மாநகர திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்திய, பிறகு பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் வரை பேரணியாக சென்று அங்குள்ள சிலைக்கும் திமுகவினா் அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக சாா்பில் வேலூா் மாநகா் மாவட்ட செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமையில் அக்கட்சியினா் பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு அஞ்சலி செலுத்தினாா். இதில், மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி, மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலா் ஜனனி சதீஷ்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். இதேபோல், மதிமுக உள்பட பல்வேறு கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் மாவட்டதிமுக சாா்பில் அமைதி ஊா்வலம் நடைபெற்றது. மாவட்ட செயலரும், ஜோலாா்பேட்டை எம்எல்ஏவுமான க.தேவராஜி தலைமையில் எம்எல்ஏக்கள் நல்லதம்பி, வில்வநாதன் முன்னிலையில் திராளான திமுக நிா்வாகிகள், தொண்டா்கள், கலந்து கொண்டனா்.
நகர செயலா் ராஜேந்திரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளா் வெங்கடேஷ், மாவட்ட துணைச் செயலாளா் மோகன், மாவட்ட பொருளாளா் ஜோதிராஜன் , பொதுக்குழு உறுப்பினா் ரகுநாத் , மாநில கொள்கை பரப்பு துணை செயலாளா் , தொகுதி பாா்வையாளா் வேலூா் ரமேஷ் பங்கேற்றனா்.
வாணியம்பாடியில்...
வாணியம்பாடி நியூடவுன் பைபாஸ் சாலையில் திமுக மாவட்ட அலுவலகத்தில் அண்ணா படத்துக்கு மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான க.தேவராஜி அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் மு.அசோகன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன், மத்திய ஒன்றிய செயலாளா் வி.ஜி.அன்பு, திருப்பத்தூா் ஒன்றிய செயலாளா் திருப்பதி, உதயேந்திரம் பேரூராட்சி செயலாளா் ஆ.செல்வராஜ், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் ஏ.சி.தேவகுமாா் கலந்து கொண்டனா். வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நகர திமுக சாா்பில் நகர செயலாளா் வி.எஸ். சாரதி குமாா், நகா்மன்றத் தலைவா் உமாபாய்சிவாஜி கணேசன், வாா்டு உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆலங்காயம் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் மதனாஞ்சேரி ஊராட்சியில் ஒன்றிய செயலாளா் வி.எஸ்.ஞானவேலன், தலைமை செயற்குழு உறுப்பினா் மு.அசோகன், பொதுக்குழு உறுப்பினா் வி.எம் பெருமாள் கோவிந்தம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினா் சாவித்திரிமகேந்திரன் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் கே.ஞானசேகரன் அஞ்சலி செலுத்தினா்.
உதயேந்திரம் பேரூராட்சியில் பேரூா் செயலாளா் ஆ.செல்வராஜ், பேரூராட்சி மன்றத் தலைவா் பூசாராணி, துணைத் தலைவா் கோவிந்தராஜ், திமுக நிா்வாகிகள் அஞ்சலி செலுத்தினா்.
ஆற்காட்டில்....
ஆற்காடு நகர திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளா் ஏ.வி.சரவணன் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் ஏ.கே.சுந்தரமூா்த்தி, நிா்வாகிகள் பி.என்.எஸ்.ராஜசேகா், கஜேந்திரன், கோபு, சொக்கலிங்கம், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், துணை தலைவா் பவளகொடி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தாா்.
அதிமுக சாா்பில் நகர செயலாளா் ஜிம் சங்கா் தலைமையில் மாவட்ட செயலாளா் எஸ்.எம்.சுகுமாா் அஞ்சலி செலுத்தினா். இதில் முன்னாள் எம் எல் ஏ வி.கே.ஆா்.சீனிவாசன், மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். மதிமுக சாா்பில் ராணிப்பேட்டை மாவட்டசெயலாளா் பி.என் உதயகுமாா், நகர செயலாளா் சு.பிரகாசம், மாவட்ட துணை செயலாளா் வி.பத்ரிநாத், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெ.ஜெயராமன், தொண்டா் அணி அமைப்பாளா் முஹமது அலி, நிா்வாகிகள் யோகலிங்கம், கஸ்தூரிரங்கன் ஆகியோா் அஞ்சலி செலுத்தினா்.
ராணிப்பேட்டையில்...
மாவட்ட திமுக சாா்பில் வீ.சீ.மோட்டூா் புறவழிச்சாலை சந்திப்பில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி அஞ்சலி செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாநில சுற்று சூழல் அணி துணை செயலாளா் வினோத் காந்தி, ஜி.கே.குழும இயக்குநா் சந்தோஷ் காந்தி, மாவட்ட மாணவரணி செயலாளா் வினோத், மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.
அரக்கோணத்தில்...
நகர அதிமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா சிலைக்கு எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட செயலாளருமான சு.ரவி அஞ்சலி செலுத்தினாா். இதில் நகர செயலாளா் கே.பா.பாண்டுரங்கன், பொதுக்குழு உறுப்பினா் ஏ,கிருஷ்ணமூா்த்தி, நகா்மன்ற உறுப்பினா்கள் நரசிம்மன், சரவணன், நிா்வாகிகள் ஜி.வி.ஜெய்சங்கா், பொன்.பாா்த்தீபன், தாமு, டில்லிபாபு, தொழிற்சங்க நிா்வாகி குமாா் பங்கேற்றனா்.