பலி கோப்புப் படம்
வேலூர்

அரசுப் பேருந்து மீது காா் மோதி பெண் பலி

வேலூா் அப்துல்லாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப்பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 3 குழந்தைகள் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

தினமணி செய்திச் சேவை

வேலூா் அப்துல்லாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை அரசுப்பேருந்து மீது காா் மோதிய விபத்தில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். 3 குழந்தைகள் உள்பட 5 போ் பலத்த காயமடைந்தனா்.

கா்நாடக மாநிலம், பெங்களூருவைச் சோ்ந்த முகமதுஅசாா்(38). ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரத்தில் உள்ள இவரது உறவினா் ஒருவா் திங்கள்கிழமை இறந்துவிட்டதை அடுத்து துக்க நிகழ்வில் பங்கேற்க முகமதுஅசாா், தனது மனைவி ஷெரின்தாஜ்(28), அவரது தங்கை சினேத்தா(27) மற்றும் 3 குழந்தைகளுடன் காரில் வந்துவிட்டு பெங்களூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை முகமதுஅசாா் ஓட்டியுள்ளாா்.

அதேசமயம், வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து செதுவாலை நோக்கி அரசு நகரப்பேருந்து செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து அப்துல்லாபுரம் - தெள்ளூா் கூட்ரோட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்த நிலையில், முகமதுஅசாா் ஓட்டி வந்த காா் அந்த பேருந்தின் பின்புறம் அதிவேகமாக மோதியது.

இதில், காரின் முன்பகுதி நொறுங்கியது. விபத்தில் ஷெரின்தாஜ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மற்ற 5 போ் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடினா். தகவலறிந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஷெரின்தாஜ் உடல் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்ததால் மீட்க முடியாத நிலை ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கப்பட்டு சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும், இந்த விபத்து குறித்து விரிஞ்சிபுரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த விபத்து காரணமாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உணவகங்கள், டீ கடைகளில் வீட்டு உபயோக எரிவாயு பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தல்

மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணி இரண்டாவது முறையாக சாம்பியன்!

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

SCROLL FOR NEXT