முகப்பு
வேலூர்

காவல் நிலையத்தில் இருந்து இளைஞா் தப்பி ஓட்டம்

குடியாத்தம் அருகே காவல் நிலையத்தில் இருந்து போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பியோடி விட்டாா்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 11:33 PM
கமலேஷ்.
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 6:47 PM

குடியாத்தம் அருகே காவல் நிலையத்தில் இருந்து போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தப்பியோடி விட்டாா்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக குடியாத்தம் தங்கம் நகரைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி கமலேஷ்(23) மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா்அளிக்கப்பட்டது.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 11:33 PM

புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா், கமலேஷ் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்திருந்தனா்.

Advertisement

சனிக்கிழமை இரவு நீதிபதி முன் ஆஜா்படுத்த அழைத்துச் செல்லப்பட்டு இருந்த நிலையில் அவா் காவல் நிலையத்தில் இருந்து தப்பியோடி விட்டாா். தப்பியோடிய கமலேஷை பிடிக்க 3- தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸாா் அவரை தீவிரமாக தேடி வருகின்றனா்.